Bharat Ratna Award: முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் மற்றும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியே தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படுவது தனது அரசின் அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார். பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
நரசிம்ம ராவ் காரு இந்தியாவுக்குப் பணிபுரிந்தார் -பிரதமர் மோடி
பி.வி.நரசிம்ம ராவ் பற்றி பிரதமர் மோடி கூறுகையில், "நமது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் கூறினார். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும், நரசிம்ம ராவ் காரு பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்குப் பணிபுரிந்தார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக அவர் நினைவுகூரப்படுகிறார்" என்றார்.
Delighted to share that our former Prime Minister, Shri PV Narasimha Rao Garu, will be honoured with the Bharat Ratna.
As a distinguished scholar and statesman, Narasimha Rao Garu served India extensively in various capacities. He is equally remembered for the work he did as… pic.twitter.com/lihdk2BzDU
— Narendra Modi (@narendramodi) February 9, 2024
சௌத்ரி சரண் சிங் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், 'நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். அவரது ஒப்பற்ற பங்களிப்பிற்கு இந்த மரியாதை சமர்ப்பணம். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர். உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவர் எப்போதும் உத்வேகம் அளித்தார்.
சுவாமிநாதனின் தொலைநோக்கு பார்வை விவசாயத்துறையை மாற்றியமைத்தது -பிரதமர்
சுவாமிநாதன குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் டாக்டர் சுவாமிநாதன் முக்கியப் பங்காற்றினார். மேலும் இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். சுவாமிநாதனின் தொலைநோக்குத் தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் வளத்தையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவர்" என்றார்.
கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது
பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தாக்கூர் 1970களில் இரண்டு முறை பீகார் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் அவர் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக பல பணிகளை செய்தார்.
லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா
பாஜக தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா வழங்குவதாக பிப்ரவரி 3 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அத்வானியைத் தவிர, மீதமுள்ள நான்கு பிரமுகர்களுக்கு மரணத்திற்குப் பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.!
பாரத ரத்னா யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
பாரத ரத்னா நாட்டின் உயரிய சிவிலியன் விருது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளில் ஒரு சிந்தனையாளர், விஞ்ஞானி, தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆகியோருக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
பாரத ரத்னா விருது எப்பொழுது தொடங்கியது?
ஜனவரி 2, 1954 அன்று, அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த கௌரவத்தை வழங்கத் தொடங்கினார். இதில், சான்றிதழ் மற்றும் பதக்கம் மட்டுமே வழங்கப்படுகிறது, பணம் வழங்கப்படுவதில்லை.
ஒரு ஆண்டில் எத்தனை பாரத ரத்னா விருதுகள் வழங்கலாம்?
இந்த கவுரவம் வெளிநாட்டு பிரபலங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 3 பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படலாம்.
மேலும் படிக்க - அண்ணா,ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க EPS பிரதமர் மோடிக்கு கடிதம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ