நிர்பயா கற்பழிப்பு வழக்கு: திகார் மனு நிராகரிப்பு; புதிய மரண உத்தரவு கிடைக்கவில்லை

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் புதிய மரணதண்டனை உத்தரவை வழங்க மறுத்துவிட்டது. திகார் நிர்வாகத்தின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2020, 04:22 PM IST
நிர்பயா கற்பழிப்பு வழக்கு: திகார் மனு நிராகரிப்பு; புதிய மரண உத்தரவு கிடைக்கவில்லை title=

புது டெல்லி: நிர்பயா கற்பழிப்பு வழக்கின் நான்கு குற்றவாளிகள் எப்போது தூக்கிலிடப்படுவார்கள் என்பது இன்னும் கூட தெளிவாகத் தெரியவில்லை. தற்போது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் புதிய மரணதண்டனை வழங்க மறுத்துவிட்டது. டெல்லி கும்பல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மரணதண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட புதிய மரணதண்டனை வழங்க வேண்டும் என்ற திகார் சிறை அதிகாரிகளின் கோரிக்கையை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அனுமானத்தின் படி மரண உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

திஹார் நிர்வாகம் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தை நாடியதாகவும், குற்றவாளிகளின் மரண உத்தரவை நிறைவேற்ற புதிய தேதி சொல்லுங்கள் எனக் கோரியதாகவும் கூறப்படுகிறது. 

நீதிமன்றத்தில் திகார் சிறை அதிகாரிகள் சார்பில் வழக்கறிஞர் இர்பான் அகமது ஆஜரானார். மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்ததாகவும், தற்போது நான்கு பேரில் எந்தவொரு விண்ணப்பமும், முறையீடும் அல்லது மனுவும் எந்த நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தோஷி பவன் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை. கருணை மனுக்கான விருப்பமும் அவருக்கு உண்டு எனவும் கூறினார்.

வாதங்களை விசாரித்தபோது, நீதிமன்றம், நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா பிப்ரவரி 5 ம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு வார காலக்கெடுவிற்குள் எந்த மனுவும் விசாரிக்க முடியாது என்றும் கூறினார்கள். மேலும் மரண உத்தரவுகளை "வெறும் ஊகம் மற்றும் அனுமானத்தின் அடிப்படையில்" வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் சட்டபூர்வமான தீர்வுகளுக்கான உரிமை உள்ளது. "குற்றவாளிகளை வாழ சட்டம் அனுமதிக்கும்போது அவர்களைக் கண்டனம் செய்வது குற்றவியல் பாவம்" என்று நீதிமன்றம் கூறியது. 

விசாரணை நீதிமன்றம் முதலில் ஜனவரி 7 ஆம் தேதி மரண வாரண்ட் பிறப்பித்து ஜனவரி 22 ஐ மரணதண்டனை நிறைவேற்றும் நாளாக நிர்ணயித்தது. பின்னர் அது பிப்ரவரி 1 க்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இன்று நிர்பயா வழக்கு உச்சநீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட ஆதரவாக மத்திய அரசின் மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அது செவ்வாய்க்கிழமை அதாவது பிப்ரவரி 11 அன்று விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News