பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட LeT தாக்குதல் நடத்த திட்டம்!!
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த புதிய இலக்குகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திராவின் மக்களவைத் தொகுதியான உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் ஒரு தளத்தை தகர்க்க லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாதிகள் முயற்சித்து வருவதாக ஜீ நியூஸ் அணுகியுள்ள மத்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும், இது பல்வேறு நோக்கத்திற்காக வாரணாசியில் ஒரு தளத்தை தகர்க்க முயற்சிக்கிறது.
இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இப்பகுதியில் ஒரு தளத்தை தகற்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சில LeT பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக வாரணாசியில் பயணம் செய்துள்ளதாக வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தெரிவித்துள்ளன.
உமர் மத்னி என்ற பயங்கரவாதியும், நேபாளத்தைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியும் மே மாதத்தில் நான்கு நாட்கள் வாரணாசியில் தங்கியிருந்ததாக உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் LeT நெட்வொர்க்கை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதில் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். புனித நகரத்தில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கான வழிமுறைகளையும் பயங்கரவாதிகள் விவாதித்துள்ளனர்.
இந்த நோக்கத்திற்காக அவர்கள் வாரணாசியில் மே 7 முதல் மே 11 வரை ஒரு ஓய்வு இல்லத்தில் முகாமிட்டனர். அவர் தங்கியிருந்த காலத்தில், உமர் மட்னி இது தொடர்பாக பலரை சந்தித்துள்ளார்.
உமர் மட்னி LeT அமைப்பின் ஆட்சேர்ப்பாளராக செயல்படுகிறார், கடந்த சில மாதங்களாக, அவர் பல இளைஞர்களை தீவிரமயமாக்க முயற்சிக்கிறார். வாரணாசி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியாக இருப்பதால், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் முயற்சியைத் தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மற்றும் கோரக்பூர் பகுதிகளில் தளங்களை தகர்க்க LeT முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஜூன் மாதம் தகவல் கொடுத்தது.