கொரோனா நோயாளிகளுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு...

கொரோனா நோயளிகளின் ஊதியம் மற்றும் விடுப்புகளை பாதுகாக்கும் வகையில், உத்திரபிரதேசத்தின் நொய்டா நிர்வாகம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது...

Last Updated : Mar 29, 2020, 05:40 PM IST
கொரோனா நோயாளிகளுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு... title=

கொரோனா நோயளிகளின் ஊதியம் மற்றும் விடுப்புகளை பாதுகாக்கும் வகையில், உத்திரபிரதேசத்தின் நொய்டா நிர்வாகம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது...

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் நிர்வாகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் விடுப்பு உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் கொரோனா நோயாளிகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட உத்தரவில், கௌதம் புத்த நகர்(நொய்டா) மாவட்ட நிர்வாகம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை ஒதுக்கி வைத்து, தனிமைப்படுத்தலின் போது 28 நாட்கள் சம்பளம் வழங்குமாறு முதலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த நேரத்தில் நோயாளிகள் சம்பளம் உட்பட விடுப்பில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர்.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவில், கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பூட்டுதல் உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கடைகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்கள் / ஊழியர்களுக்கு சம்பளம் உட்பட விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளது. இதை மீறுபவர்கள் சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டையும் மேற்கண்ட சட்டத்தின் கீழ் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடியேறியதாக செய்திகள் வரும் நேரத்தில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து நொய்டா காவல்துறை ஆணையர் தெரிவிக்கையில்., உத்திரபிரதேசத்தின் யோகி அரசு கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒரு பேரழிவாக அறிவித்துள்ளது, மேலும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க இயக்கத்தை தடை செய்துள்ளது. 2005 ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகளின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அதை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Trending News