ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கருப்பு பணம் எந்த அளவுக்கு ஒழிந்தது என்பது குறித்த விவரம் கிடைக்கவில்லை என்று பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து. அதற்கு பதிலாக புதியதாக அறிமுகம் படுத்த பட்ட ரூ.,500 மற்றும் ரூ.,2000 நோட்டுகளை வங்கியிலிருந்து வாங்கிக்கொண்டனர்.
இதனால், உள்நாட்டில் உள்ள கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் உத்வேகம் ஏற்படும் என்று மத்திய அரசு கூறி வந்தது.
இந்த நடவடிக்கை தொடர்பாக நிதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்து ரிசர்வ் வங்கி அறிக்கை அளித்துள்ளது. அதில்:-
மொத்தம் ரூ.15,280 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன. இது எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்பட்டதுதான். எனினும், ரூபாய் நோட்டு வாபஸால் எந்த அளவுக்கு கருப்பு பணம் ஒழிந்தது என்பதற்கான விவரம் கிடைக்கவில்லை. இதேபோல கருப்பு பணம் எந்த அளவுக்கு வெளிக் கொண்டுவரப்பட்டது என்ற தகவலும் இல்லை.
ஒட்டு மொத்தமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும்போது ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மேம்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.