மருத்துவப் படிப்புக்கான நீட் தேசியப் பொது நுழைவுத் தேர்வு கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற செய்து சோதனை செய்தார்கள். இது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சோதனைகளை தென்மாநிலங்களில் மட்டுமே மத்திய கல்வி வாரியம் செயல்படுத்தி வருவது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கேரளத்தில் நீட் தேர்வின் போது மாணவியரின் உள்ளாடையைக் களையச் சொன்னது தொடர்பாக சிபிஎஸ்இ மண்டல இயக்குநர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.