நியூடெல்லி: இந்திய குடியரசு தினமான இன்று, ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பின், திரவுபதி முர்மு கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும். சென்னையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியத் தலைநகர் டெல்லியில், குடியரசு தின அணிவகுப்பு காலை 10:30 மணிக்கு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கி செங்கோட்டை நோக்கிச் செல்லும். தேசிய போர் நினைவிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தவுடன், அணிவகுப்பு விழா தொடங்கும்.
நாட்டிற்காக இன்னுயிர் நீத்த போர்வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு, பிரதமர் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்யா பாதைக்குக்ச் செல்வார்கள். நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வாக, இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும், அதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி வீரவணக்கம் செலுத்திய பின், தேசிய கீதம் இசைக்கப்படும். இம்முறை, 21-துப்பாக்கி வணக்கம் செலுத்தும் துப்பாக்கியில் மாற்றம் செய்யப்பட்டுல்ளது.
வழக்கமாக பயன்படுத்தப்படும் விண்டேஜ் 25-பவுண்டர் துப்பாக்கிக்கு (vintage 25-pounder gun) பதிலாக, உள்நாட்டு தயாரிப்பினை ஊக்குவிக்கும் 'ஆத்மநிர்பர்தா'வைப் பிரதிபலிக்கும் 105-மிமீ இந்தியன் ஃபீல்ட் துப்பாக்கி (105-mm Indian Field Guns) பயன்படுத்தப்படும். 105 ஹெலிகாப்டர் யூனிட்டின் நான்கு Mi-17 1V/V5 ஹெலிகாப்டர்கள் கர்தவ்யா பாதையில் இருக்கும் பார்வையாளர்கள் மீது மலரிதழ்களைப் பொழியும்.
மேலும் படிக்க | தமிழகத்தில் 74 வது குடியரசு தினவிழாவில் ஆளுநர் RN ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்
குடியரசு தின அணிவகுப்பு
குடியரசுத் தலைவர் மரியாதையுடன் தொடங்கும், குடியரசு தினவிழாவில், கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்படும். 2023 குடியரசு தின அணிவகுப்பை தூர்தர்ஷன் டிவி சேனல் மூலம் பார்வையாளர்கள் பார்க்கலாம் மற்றும் தூர்தர்ஷனின் ட்விட்டர் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஸ்ட்ரீம் பார்க்கலாம்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகள் இடம் பெறுகின்றன.
குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்ததோடு, நாட்டின் சுதந்திரத்தின் "அமிர்த மஹோத்சவ்" சமயத்தில் கொண்டாடப்படுவது இந்த முறை சிறப்பு வாய்ந்தது என்று கூறினார். "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" என்பது 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும். மோடி ட்வீட் செய்துள்ளார்.
"நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற நாம் ஒற்றுமையாக முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!"
மேலும் படிக்க | Republic Day: குடியரசு தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ