வருகிறது தேர்தல்! 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயார்!

வாக்காளர்களின் விரல்களில் வைக்க சுமார் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Last Updated : Mar 14, 2019, 10:58 AM IST
வருகிறது தேர்தல்! 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயார்! title=

வாக்காளர்களின் விரல்களில் வைக்க சுமார் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

அந்த வகையில் தேர்தலின்போது ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. மொத்தம் 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் கமிஷனிடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது.

Trending News