வங்கி அதிகாரி என நம்பி ரூ.7.20 லட்சம் இழந்த மும்பை பெண்!

மும்பை பெண்மணி ஒருவர் ஆன்லைன் திருடர்களிடம் ஏமாந்து ரூ. 7.20 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jun 4, 2018, 05:25 PM IST
வங்கி அதிகாரி என நம்பி ரூ.7.20 லட்சம் இழந்த மும்பை பெண்! title=

மும்பை: மும்பை பெண்மணி ஒருவர் ஆன்லைன் திருடர்களிடம் ஏமாந்து ரூ. 7.20 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

மும்பையின் மாநிலம் நெருல் என்னும் பகுதியை சேர்ந்த தஸ்நீம் முகார்ஜி மொடக் என்னும் 40 வயது பெண்மனி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களிடம் தனது கடவுச்சொல்லினை பகிர்ந்துக்கொண்டதன் மூலம் ரூ.7.20 லட்சம் இழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர், தான் வங்கி அதிகாரி எனவும், தங்களது வங்கி கணக்கில் இருக்கும் பாதுகாப்பு கருவிகளை சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறி அவரிடம் இருந்து OTP எண்ணினை கேட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

ஒரே வாரத்தில் 28 முறை தொலைபேசியில் அழைத்து OTP எண்ணினை பெற்ற கொள்ளையன், அவருக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை கொள்ளையடித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நெருல் பகுதி காவல்துறையிடம் மொடக் கடந்த மே 29 அன்று புகார் ஆளித்துள்ளார். விசாரணையில் பண பரிமாற்றமானது மும்பை, நொய்டா, குர்காவுன், கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைப்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மொடக்கின் அறியாமையினை பயன்பற்றி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மொடாக்கிற்கு ஆன்லைன் பேங்கிங் முறை என்றால் என்ன என்பதே தெரியாமல் இருப்பது வேதனை.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், விரைவில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்கான வேலைகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

Trending News