மும்பை: மும்பை காவல்துறை குற்றவியல் பிரிவு பெண் காவலரை நவி பகுதி சப் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்!
முப்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அமித் ஷெல்லர். இவர் தன் கட்டுப்பாடில் இருக்கும் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது பெண் காவலரின் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து, அவரை மயக்க நிலைக்கு ஆளாக்கி பின்னர் வன்கொடுமை செய்தாக தெரிகிறது. மேலும் இந்த சம்பவத்தினை கைபேசியில் பதிவு செய்து, அதைக்கொண்டு அவரை தொடர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமைக்க ஆளாக்கியதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 31-வயது பெண் காவலர் கடந்த சனியன்று மும்பை குற்றவியல் பிரிவு தலைமையகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை பலமுறை பலவந்தப்படுத்திய அமித், அவரின் விருபத்திற்கு இணங்கா பட்சத்தில் வீடியோ பதிவினை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் தன்னை பலமுறை அமித் அடித்து துன்புறுத்தியதாகவும் இந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷெல்லர் மீது SC/ST (Prevention of Atrocities) Act-ன் கீழ் மற்றும் பாலியல் வழக்கு தொடர்பான IPC சட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷெல்லர் இருவரும் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.