ஜம்முவில் மொபைல் சேவை மீண்டும் துவக்கம்; ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சுரி!

ஜம்முவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்போன் சேவையானது, 5 மாவட்டங்களில் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது!

Last Updated : Aug 29, 2019, 10:40 AM IST
ஜம்முவில் மொபைல் சேவை மீண்டும் துவக்கம்; ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சுரி! title=

ஜம்முவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்போன் சேவையானது, 5 மாவட்டங்களில் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீரில் உள்ள தங்கள் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க விரும்புவதாகவும், இதற்காக அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று முகமது யூசுப் தாரிகாமியை சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் செல்லும் போது வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி ஈடுபட்டால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். இதையடுத்து, தனது கட்சி எம்.எல்.ஏவான யூசுப் தாரிகாமியை சந்திக்க சீதாரம் யெச்சூரி ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றார். 

இதை தொடர்ந்து, ஜம்முவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியுள்ளது. தோடா, கிஸ்துவார், ரம்பான்,ராஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில்  செல்போன் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

 

Trending News