Dating செயலியால் ஏற்பட்ட நட்பு, கொலையில் முடிந்தது!

கடந்த மார்ச் 22 ஆம் நாள் மாயமான டெல்லி பல்கலை மாணவர் ஆயுஷ் நாட்டியால், டெல்லி துவாரகா பகுதியில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்!

Last Updated : Mar 30, 2018, 07:22 PM IST
Dating செயலியால் ஏற்பட்ட நட்பு, கொலையில் முடிந்தது! title=

கடந்த மார்ச் 22 ஆம் நாள் மாயமான டெல்லி பல்கலை மாணவர் ஆயுஷ் நாட்டியால், டெல்லி துவாரகா பகுதியில் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்!

டெல்லி பல்கலை கிழக்கு கேம்பஸில் பயிலும் துவாரகாவைச் சேர்ந்த ஆயுஷ் நாட்டியால் என்ற மாணவர், கடந்த 22-ஆம் தேதி கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டிபிடித்து தருமாறு டெல்லி காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஆயுஷ் நாடியால் கைபேசியிலிருந்து அவரது பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. பணத்தை எடுத்துக்கொண்டு அவரது பெற்றோர் வெவ்வேறு இடங்களுக்கு திரிந்தனர். எனினும் ஆயுஷினை அவர்களால் மீட்க முடியவில்லை.

இந்நிலையில் அவரது உடல் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் அடைக்கப்பட்டு துவாரகா பகுதி சாக்கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையில், மாணவன் ஆயுஷ் உத்தம்பூரைச் சேர்ந்த இஸ்தியாக் அலி என்ற டிசைனர் ஒருவருடன், டேட்டிங் செயலி (Tinder) மூலம் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த 10 தினங்களில் மட்டும் இவர்கள் இருவரும் சுமார் 3 முறை சந்தித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இஸ்தாயக் அலியை கைது செய்து விசாரித்ததில் மாணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொலை செய்ததாகவும், உடலை மறைக்க நேரம் தேவைப்பட்டதால், பணம் கேட்டு மிரட்டி நாடகமாடியது தெரிவித்துள்ளார்!

Trending News