மெகா பேரணி வாபஸ்: விவசாயிகளின் கோரிக்கைக்கு மராட்டிய அரசு உறுதி!

விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Last Updated : Mar 12, 2018, 06:52 PM IST
மெகா பேரணி வாபஸ்: விவசாயிகளின் கோரிக்கைக்கு மராட்டிய அரசு உறுதி! title=

விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிஷான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40 ஆயிரம் பேருடன் கடந்த 5-ம் தேதி நாசிக்கில் பேரணியை தொடங்கினர். மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சட்டசபையை நோக்கி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாசிக் முதல் மும்பை வரை 35,000 விவசாயிகள் பேரணி.

நாசிக்கில் தொடங்கிய இந்த பேரணி இன்று தானே மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. 180 கிலோ மீட்டர் தூரத்தை நடை பயணமாகவே வந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். தினமும் 30 கி.மீ நடக்கும் இந்த பேரணி இன்று மும்பையில் நடந்தது.

இந்த பிரமாண்ட பேரணி மராட்டியத்தின் மற்ற விவசாயிகளையும் இவர்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது. 

இதற்கிடையே, விவசாயிகளின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இந்த நிலையில், விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து இருப்பதாகவும் இதனால், போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Trending News