Pune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன?

புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2021, 11:56 PM IST
  • மகாராஷ்டிராவில் மற்றுமொரு தீவிபத்து
  • புனேவின் குப்பை பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து
  • 11 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன்
Pune: குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து, காரணம் என்ன? title=

புனே: புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

உயிரிழப்பு தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.  தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை.கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்,சேகரிக்கப்படும் குப்பைகள் (Garbage) பிரிக்கப்பட்டு பல்வேறு விதமாக பிரிக்கப்பட்டு, அவற்றில் இருந்து பயனும் பெறப்படுகிறது.

இப்போதும் 100 சதவித மக்களும் குப்பைகளை வகை பிரித்து அப்புறப்படுத்தும் பொறுப்பான குடிமக்களாக இருப்பதில்லை. சேகரிக்கப்படும் குப்பைகள் வழக்கமாக பொருட்கள் மீட்டெடுக்கும் நிலையம் எனப்படும் MRF (materials recovery facility) நிலையத்தில் நாற்றம் மிகுந்த கழிவுகள் பிரித்தெடுக்க வேண்டும். இவை காகிதம், பிளாஸ்டிக், பாக்கேஜிங் பேப்பர் (Paper), பாட்டில் என பல்வேறு கழிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

Also Read | கொரோனாவின் புதிய அறிகுறி வெளியீடு; இந்த அறிகுறி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

கழிவு பெறும் தளம், கன்வேயர் பெல்ட்டைக் கொண்ட ஷரெட்டர்ஸ் எனப்படும் துண்டாக்கும் கருவி, உரம் தொட்டிகள், உறுதிப்படுத்தல் பகுதி மற்றும் சல்லடை பகுதி ஆகியவற்றை ஒவ்வொரு மைக்ரோ மையத்திலும் காணலாம். 

கழிவுப்பொருட்களை மக்கும், மக்காத, அபாயகரமான கழிவுகள் மற்றும் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள் என நான்கு பிரிவுகளாகப் பிரித்து மேலாண்மை செய்யப்படுகிறது. கழிவில் இருந்து உரமும் (Manure) தயாரிக்கப்படுகிறது.

இப்படி நமது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து வெறும் சேதத்தை மட்டுமா ஏற்படுத்தும்? பதப்படுத்தும் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி, வேறுவிதமான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

Also Read | பொறுப்பில்லாம சாலையில் குப்பைய போடறியா? புடி ‘return gift’

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News