பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர்!

Last Updated : Jul 8, 2018, 01:34 PM IST
பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி title=

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் ஜேஎன்என் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ANI தகவலின் படி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

 அஞ்சேரி கிராமத்தில் உள்ள தபஜி கிராம பகுதியில் பேருந்து சென்று கொண்டிருக்கையில், கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த ட்ரக் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில், பேருந்தின் ஒரு பக்கம் முழுக்க சேதமடைந்தது. இதையடுத்து, அருகில் உள்ள மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மீட்ட்புப்படையினர் மீட்ட்புப்பணியில் ஈடுபட்டனர். 

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News