தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் உள்பட அனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் 100 சதவீதம் இலவச சிகிச்சை அளிக்கும் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.
நாட்டில் மகாராஷ்டிராவில் தான் அதிக COVID-19 நோயாளிகள் (10,498) மற்றும் இறப்புகள் (459) பதிவாகியுள்ளன. குறிப்பாக மும்பை பெருநகரப் பகுதி - தானே, நவி மும்பை, கல்யாண், வசாய், விரார் போன்றவற்றை மற்றும் நாக்பூர், புனே, நாசிக் ஆகியவை மாநிலத்தின் முக்கிய கொரோனா பாதிப்பு பகுதிகளாகும்.
மகாத்மா ஜோதிபா புலே சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து COVID-19 நோயாளிகளுக்கு 100 சதவீத இலவச சிகிச்சையை அளிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். COVID-19 நோயாளிகளுக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்று நோய்கள் சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் இதுபோன்ற வாய்ப்பை வழங்கிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, 85 சதவிகித மாநிலத்தை இத்திட்டதிதன் கீழ் கொண்டுவந்ததாகவும், தற்போது மீதமுள்ள 15 சதவிகிதத்தினரும் COVID-19-க்கு எதிராக சுகாதார காப்பீட்டுத் தொகையை பெறுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அட்டை முற்றிலும் இலவசமாக இருக்கும், என்றும் டோப் தெளிவுபடுத்தினார்.
COVID-19 சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்ற குடியிருப்பாளர்களின் புகார்களைத் தொடர்ந்து இது தொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார் வந்தது. மும்பை மற்றும் புனே நகர நோயாளிகளுக்கான பொது காப்பீட்டு பொதுத்துறை சங்கத்துடன் (ஜிப்ஸா) ஒப்பந்தம் செய்திருந்தோம். வார்டு அல்லது அறையின் அளவு மற்றும் வசதிகளைப் பொருட்படுத்தாமல் மருத்துவமனைகள் அரசாங்க விகிதங்களின்படி மட்டுமே கட்டணம் வசூலிக்கும். மகாராஷ்டிராவின் எஞ்சிய பகுதிகளுக்கு, மூன்றாம் தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு, பொது வார்டு கட்டணங்கள் வசூலிக்கப்படும். அனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் ஒரு நிலையான வடிவங்களை நாங்கள் நிர்ணயித்துள்ளோம், என டோப் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை தனியார் மருத்துவமனைகளில் கட்டுப்படுத்துகிறது. கோவிட் -19 சிகிச்சையைத் தவிர, மகாத்மா ஜோதிபா புலே சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளும் வழங்கப்படும். முன்னதாக, இந்த திட்டத்தில் 496 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டன. இப்போது, 1000 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் அதன் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.