காதலர் தினத்தன்று லக்னோ பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
Lucknow University closed its doors for students after issuing an advisory yesterday that students will not be allowed to roam inside the university premises on Valentine's Day. pic.twitter.com/YPj10K5tuM
— ANI UP (@ANINewsUP) February 14, 2018
இந்நிலையில், காதலர் தினத்தன்று மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்று லக்னோ பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியதை அடுத்து இன்று மூடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி வளாகத்திற்குள் யாராவது அமர்ந்திருந்தாலோ, அல்லது சுற்றி கொண்டிருந்தாலோ அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும் என்று லக்னோ பல்கலைக்கழகம் நேற்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.