59 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!!

நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!!

Last Updated : May 19, 2019, 09:45 AM IST
59 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!! title=

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் - 9 மணி நிலவரம்

உத்தரப்பிரதேசம் - 5.97

ஹிமாச்சலப்பிரதேசம் - 0.87

ஜார்க்கண்ட் - 13.19

சண்டிகர் - 10.40

பஞ்சாப் - 4.64

மேற்கு வங்கம் - 10.54

பீகார் - 10.65

மத்திய பிரதேசம் - 7.16


நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!!

பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு அணி மாறிய நடிகர் சத்ருகன் சின்ஹா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரதாத் உள்பட 918 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர். 
வாக்குப்பதிவுக்காக சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

பதற்றம் மிக்க பகுதிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு நடைபெறும் மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இத்தேர்தலில் சுமார் பத்து கோடிக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இத்துடன் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவுபெறும். பணப் பட்டுவாடா தொடர்பான புகாரில் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Trending News