வில்லன் அவதாரம் எடுத்த மற்றொரு தமிழ் ஹீரோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆதி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:27 PM IST
  • லங்குசாமி இயக்கும் புதிய திரைப்படம்
  • த வாரியர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
  • வில்லனாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்
வில்லன் அவதாரம் எடுத்த மற்றொரு தமிழ் ஹீரோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் title=

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு திரும்பியிருக்கும் இயக்குநர் லிங்குசாமி, புதியதாக ‘தி வாரியர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ராம் பொதியேனி நடிக்கிறார். தெலுங்கில் பிரபல இளம் நடிகராக இருக்கும் அவருக்கு, கோலிவுட்டில் ரிலீஸாக உள்ள முதல் திரைப்படம் இதுவாகும். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாஸாக வெளியிட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஜினிகாந்த் படத்தில் வைகைப் புயல் - கலக்கும் நெல்சன் திலீப்குமார்

அதில் தமிழ் நடிகர் ஆதிபினுஷெட்டியும் நடிக்கிறார். வில்லன் ரோலில் நடிக்கும் ஆதியின் பர்ஸ்ட் லுக்கை மகா சிவராத்திரியையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இருக்கும் ஆதியின் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. தி வாரியர் படத்தில் ஆதி ‘குரு’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். 

வணக ரீதியான ஆக்ஷன் படங்களை எடுப்பதில் வல்லவரான லிங்குசாமி, சில பணப் பிரச்சனைகள் காரணமாக படம் இயக்குவதில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர், அதனை சமாளித்து மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பியிருக்கும் அவர், இளம் நடிகர்களான ராம்பொதியேனி மற்றும் ஆதியை வைத்து பக்கா கமர்ஷியலாக ‘தி வாரியர்’ படத்தை உருவாக்கி வருகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் இப்படத்தை தயாரிக்கிறது. புஷ்பா படத்துக்கு இசையமைத்து ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மூலம் ஹிட்டடித்த தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

மேலும் படிக்க | இயக்குநராக களமிறங்கும் யுவன் - ஹீரோ கிடையாது...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News