டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா?: உயர்நீதிமன்றம்!

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Last Updated : Mar 8, 2018, 08:40 AM IST
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா?: உயர்நீதிமன்றம்! title=

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா என்று அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் ஒருவரான பிரகாஷ் ஜார்வாலின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கண் எதிரிலேயே அரசு ஊழியர் தாக்கப்படுகிறார் எனில், மற்ற இடங்களில் நிலைமை என்னவாக இருக்கும் என்று நீதிபதி முக்தா குப்தா வினவினார்.

எதிர்காலத்தில் அதுபோன்ற சம்பவம் நிகழாது என்று எப்படி கருத முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வால் மீது ஏற்கனவே உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி முக்தா குப்தா, சம்பந்தப்பட்டவரின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடரும் என தெரிவித்தார்.

Trending News