COVID Update: 24 மணி நேரத்தில் 83,000 பேர் புதிதாக பாதிப்பு! 49 லட்சத்தைத் தாண்டியது மொத்த எண்ணிக்கை!

நாட்டின் ஒட்டுமொத்த COVID எண்ணிக்கை 49,30,237 ஆக உள்ளது. அவற்றில் 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2020, 10:14 AM IST
  • கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 83,000 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மகாராஷ்டிரா இந்தியாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் தொடர்கிறது.
  • இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.64 சதவீதமாகக் குறைந்துள்ளது.
COVID Update: 24 மணி நேரத்தில் 83,000 பேர் புதிதாக பாதிப்பு! 49 லட்சத்தைத் தாண்டியது மொத்த எண்ணிக்கை! title=

உலகம் முழுதும் இன்னும் கொரோனாவின் களியாட்டம் நிற்பதாகத் தெரியவில்லை. கொரோனா வைரஸ் (Corona Virus) தொடர்ந்து தன் பிடியில் மக்களை சிக்கவைத்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 83,000 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 49 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த COVID எண்ணிக்கை 49,30,237 ஆக உள்ளது. அவற்றில் 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ALSO READ: செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!!

நேற்று பிரேசிலைத் (Brazil) தாண்டி உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மீட்டெடுப்புகளைக் கொண்ட நாடாக இந்தியா ஆனது.

சுகாதார அமைச்சகத் (Ministry Of Health) தளத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 38,59,400 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,054 பேர் இறந்த நிலையில், நாட்டில் இறப்பு எண்ணிக்கை 80,776 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா (Maharashtra) இந்தியாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் தொடர்கிறது. அங்கு தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. தேசிய தலைநகரான டெல்லியும் கடந்த சில வாரங்களாக அதிகமான அதிகரிப்புக்கு ஆளாகியுள்ளது. COVID-19 நோய்த்தொற்று பிரச்சனையைப் பொறுத்தவரை, இந்தியாவிற்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால், இங்கு கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் (Fatality Rate) 1.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீட்பு விகிதமும் (Recovery Rate) 78 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

ALSO READ: 2024-க்கு முன்னாடி Covid-19 தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்ல ராஜா: ஆதார் பூனவல்லா!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News