கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ்க்கு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
#WATCH: Lalu Prasad Yadav outside Ranchi's Special CBI Court after being convicted in a #FodderScam case pic.twitter.com/hn6REkaizv
— ANI (@ANI) December 23, 2017
முன்னதாக, லாலு பிரசாத் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், அந்த ஐந்து வழக்குகளில் ஒன்று கால் நடை தீவன ஊழல்.
1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது கால் நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.
முன்னதாக, தீர்ப்பின் தேதி அன்று லாலு மற்றும் அவரது மகன் தேஜஸ்வி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Police has taken #LaluPrasadYadav into custody; he has been convicted in a #Fodderscam case today (File pic) pic.twitter.com/SqoTXgJRem
— ANI (@ANI) December 23, 2017
இதையடுத்து பாட்னா ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரியாக்கினார்.
இதில்பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 11 பேர் இறந்து விட்டதால் மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
அதை யடுத்து,கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. லல்லு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Ranchi: Visual from Birsa Munda Central Jail where Lalu Prasad Yadav will be lodged; he has been convicted in #FodderScam case today pic.twitter.com/ZEoPHsQOIt
— ANI (@ANI) December 23, 2017
ஜெயிலில் தண்டனை அனுபவித்த 2 மாதங்களில் லல்லு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார். லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் டில் நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று லாலுபிரசாத் யாதவ்க்கு பிற்பகல் ஏறக்குறைய 3.45 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.
அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை விவரம் ஜனவரி 3 ஆம் தேதி வழங்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். கால்நடை தீவின வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு செல்ல உள்ளார்.