புது டெல்லி: லக்கிம்பூர் கெரி வன்முறை: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று (வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் குற்றப்பிரிவு முன்பு நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்தநிலையில், லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரானார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். ஆஷிஷ் மிஸ்ரா நேற்று ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகாவில்லை.
இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நேற்று லக்கிம்பூர் கெரியில் (lakhimpur kheri) உள்ள மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் இல்லத்தில் ஒரு நோட்டிசை ஒட்டினர். அதில் வன்முறை தொடர்பாக அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை அக்டோபர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
#WATCH Son of MoS Home Ajay Mishra Teni, Ashish Mishra arrives at Crime Branch office, Lakhimpur
He was summoned by UP Police in connection with Lakhimpur violence. pic.twitter.com/g6wMpHYOKr
— ANI UP (@ANINewsUP) October 9, 2021
முன்னதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) எஸ்ஐடி முன் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மத்திய அமைச்சர் அஜய் குமாரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை ஆஜராகவில்லை. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா நேபாளம் தப்பிச்சென்றதாக செய்தி பரவத் தொடங்கியது. இருப்பினும், அவரது தந்தை அஜய் மிஸ்ரா தனது மகன் லக்கிம்பூர் கெரியில் இருப்பதாக கூறினார்.
Uttar Pradesh Police pastes another notice outside the residence of Union Minister Ajay Kumar Mishra in Lakhimpur Kheri, asking his son Ashish Mishra to appear before it on 9th October, 11am, in connection with the violence pic.twitter.com/WrdDq1nEmK
— ANI UP (@ANINewsUP) October 8, 2021
ALSO READ | லக்கிம்பூர் கொலை சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உ.பி. அரசிடம் சரமாரி கேள்வி
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவராக திக்குனியாவுக்குச் சென்று, இவ்வளவு கொடூரமான சம்பவம் நடந்த பிறகும் குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை அமைச்சராக தொடர்ந்து நீடித்தால், இந்த சம்பத்தில் நீதியை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று எதிர்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆஷிஷ் மிஸ்ராவை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். ஒரு சாதாரண மனிதன் மீது 302 வழக்கு பதிவு செய்தால், காவல்துறை அவரை உடனடியாக கைது செய்கிறது. ஆனால் இந்த வழக்கில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யபடததால், அவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த விஷயத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒருவர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், யாருடைய அழுத்தத்திலும் அரசு எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. விசாரணை செயல்முறை நியாயமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் விசாரணை அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குற்றம் நடந்த இடத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் சென்றுக்கொண்டு இருப்பதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் இணைய சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ALSO READ | லக்கிம்பூர் கொலை வழக்கு: உடல்நலக் குறைவு எனக்கூறி தப்பித்த பாஜக அமைச்சரின் மகன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR