மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத். இவருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வாகை சூடியது. நீண்ட இழுபறிக்கு பின்னர், மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யாரை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருடன் ராகுல் காந்தி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில முதலமைச்சரின் பெயர் முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சரின் பெயர் 4 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் பதவியேற்கும் விழா, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் போபால் ஜம்பூரி மைதானத்தில் நடைபெற்றது. மத்திய பிரதேசம் முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.