டெல்லி போக்குவரத்து அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு!!

டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கலோட் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Last Updated : Oct 10, 2018, 11:42 AM IST
டெல்லி போக்குவரத்து அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு!! title=

டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கலோட் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

 

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து, வருவாய், தொழில்நுட்பம், நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சராக இருந்து வருபவர் கைலாஷ் கலோட்.

இந்நிலையில் அமைச்சர் கைலாஷ் கலோடுக்கு சொந்தமான 16 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Trending News