International Travel: அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது பயணத் தடை

சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் (DGCA) வெளியிட்ட சமீபத்திய சுற்றறிக்கையின்படி, திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக விமான சேவைகளின் இடைநிறுத்தம் அக்டோபர் 31, 2021 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 07:57 PM IST
International Travel: அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது பயணத் தடை title=

புதுடெல்லி: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக சர்வதேச வணிக விமானங்கள் அக்டோபர் 31 வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் (DGCA) வெளியிட்ட சமீபத்திய சுற்றறிக்கையின்படி, திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக விமான சேவைகளின் (International Travel) இடைநிறுத்தம் அக்டோபர் 31, 2021 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவுவதை தடுக்க, வர்த்தக சர்வதேச விமானங்களின் இயக்கம் மார்ச் 23, 2020 முதல் நிறுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட லகடவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி இருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர, ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற பணித்திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன.

ALSO READ: வெளிநாடு செல்ல உங்கள் பாஸ்போர்டில் இதை இணைக்க வேண்டியது மிக அவசியம் : விவரம் இதோ

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சில நாடுகளுக்கும் மட்டும் பின்னர் சிறிது தளர்த்தப்பட்டன. கடந்த ஆண்டு, சில நாடுகளுடன் இந்தியாவுக்கு ஒரு ஏர் பபிள் ஒப்பந்தம் இருந்தது. 

இரு நாடுகளுக்கு இடையில் ஏர் பபிள் ஒப்பந்தம் போடப்பட்டால், அந்த நாட்டுகளுக்கு இடையில் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது உலகின் பெரும்பாலான நாடுகள் சர்வதேச பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வர அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. 

இருப்பினும், கோவிட் தொற்றுநோய் உலகை ஆட்கொண்ட பிறகு, பயணம் தொடர்பான விதிகளிலும் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த விதிகளில் ஒன்று, உங்கள் பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதாகும். 

ALSO READ: இனி இந்தியா மட்டுமல்ல, கனடா உள்ளிட்ட 50 நாடுகள் Co-WIN செயலியை பயன்படுத்தும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News