ராய்ப்பூர்: ராய்ப்பூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட்டர்கள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் மேயர்களை கவுரவிப்பதற்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியது தான் பெரும் அதிர்ச்சி மற்றும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கும் இடையே சில பிரச்சனைகளால் மோதல் நடந்து வருகிறது. அவர்களின் மோதல் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கின்றனர் எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர் கூறியது..
"கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல் படுத்தினார். ஆனால் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக அரசாங்கத்தின் இந்த ஏழு மாதங்களில் பாராளுமன்றத்தில் 370 வது பிரிவு சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. போன்ற திட்டங்களை அமித் ஷா கொண்டுவந்துள்ளார். அவர்கள் இருவரும் இந்த முழு நாட்டிற்கும் ஆங்கிலம் கற்பிக்கிறார்கள்: என்றார் பாகெல்.
அமித் ஷாவைத் தாக்கி, பாகெல் மேலும் கூறுகையில், அமித் ஷாவின் ஆட்சியின் கடைசி ஏழு மாதங்களில் நாட்டு மக்கள் தெருக்களில் வந்துள்ளனர்.
"ஒருபுறம் அமித் ஷா சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் என காலவரிசை பற்றி பேசுகிறார். ஆனால் மோடிஜி நாட்டில் எந்த என்.ஆர்.சி அமல் செய்யமாட்டோம் என்று கூறுகிறார். தற்போது யார் உண்மையை பேசுகிறார்கள் என்பதுதான் கேள்வி.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் உள் மோதல்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்படுகிறது என்று பாகேல் கூறினார்.
"இன்று நாடு பணவீக்கம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகள் குறித்து யாரும் பேசவில்லை. குடியுரிமை பிரச்சினையை எழுப்புவதன் மூலம் அவர்கள் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறார்கள். இந்திய குடியுரிமையை நிரூபிக்க யாராவது உங்களிடம் (மக்களை பார்த்து) கேட்டால்... இது எவரும் கேட்கக்கூடாத மிக அவமானகரமான கேள்வி என்று பாகேல் கூறினார்.
எனது மாநிலத்தில், சுமார் 40 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நிலமற்றவர்கள். அவர்கள் குடியுரிமையை எவ்வாறு நிரூபிப்பார்கள்? எனக் பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பினார்.
பாஜக பதிலடி:
பாஜக பதிலடி:பூபேஷ் பாகேலின் கருத்துக்கு பதிலளித்த பாஜக, முதலில் தனது சொந்த கட்சியின் மோதலை தீர்க்குமாறு காங்கிரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதாவது "உள்விவகாரங்களால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியில் அவர் கவனம் செலுத்த வேண்டும். பாஜகவுக்கு எந்த மட்டத்திலும் மோதல்கள் இல்லை" பாஜக சார்பில் கூறப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.