Indian Railways: மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகை, விரைவில் அறிவிப்பு

Indian Railway Concession For Senior Citizen:  ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2022, 09:26 PM IST
  • மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே சலுகை.
  • வயது வரம்பு மாறும்.
  • விரைவில் விதிகள் வகுக்கப்படும்.
Indian Railways: மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகை, விரைவில் அறிவிப்பு  title=

மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே சலுகை: ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் விலக்கு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல தகவல்களை தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரயில்வே மீட்டெடுக்கப் போகிறது. இதனுடன், தகுதி வரம்பிலும் மாற்றம் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

வயது வரம்பு மாறும்

மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, டிக்கெட்டுகளில் கிடைக்கும் சலுகைகள் சில வகைகளுக்கு மட்டுமே அளிக்கப்படும். எனினும், முன்னர் அனைத்து வகை மக்களுக்கும் சலுகைகள் கிடைத்தன.

விரைவில் விதிகள் வகுக்கப்படும்

மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கான மானியத்தை தக்க வைத்துக் கொண்டு இந்த சலுகைகளின் விலையை குறைக்க யோசனை உள்ளது. தற்போது வரை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மேலும் படிக்க | புத்தாண்டில் ‘இந்த’ வழித்தடத்தில் வந்தே பாரத்... வெளியானது முக்கிய தகவல்! 

53 சதவிகித தள்ளுபடி கிடைக்கிறது

ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ரயிலில் பயணிக்கும் அனைத்து குடிமக்களும் சராசரியாக 53 சதவீத கட்டணத்தில் தள்ளுபடி பெறுகின்றனர். இதனுடன், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர இன்னும் பல வகையான சலுகைகளும் கிடைக்கின்றன. 

எந்த வகுப்பில் தள்ளுபடி வழங்கப்படும்?

மக்களவையில், ரயில்வே அமைச்சரிடம், ரயில்வே சலுகை குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன. ரயில்வே துறை ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை மீண்டும் வழங்குமா என அமச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "2019-20ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. இது தவிர, ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது." என கூறினார்.

மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் தாய்லாந்துக்கு போகணுமா? ஐஆர்சிடிசி செம்ம ஆஃபர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News