கோவாவில் மிக் -29 போர் விமானம் விபத்து; விமானிகள் பாதுகாப்பாக மீட்பு

கோவாவில் மிக் -29 போர் விமானம் விபத்துக்குள்ளானது; இரண்டு விமானிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 16, 2019, 01:40 PM IST
கோவாவில் மிக் -29 போர் விமானம் விபத்து; விமானிகள் பாதுகாப்பாக மீட்பு title=

பனாஜி: கோவா மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டு  இருந்த மிக் -29 கே போர் விமானம் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இரு விமானிகளும் பாதுகாப்பாக தப்பித்தனர். இந்த விபத்தில் சிக்கிய போர் விமானத்தின் பயிற்சியாளர் இருந்தார்.

மிக் -29 கே பயிற்சி விமானத்தில் என்ஜின் தீப்பிடித்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாத்வால் தெரிவித்தார். போர் விமானத்தில் இருந்த பைலட் கேப்டன் எம். ஷோகண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் ஆகியோர் எந்தவித காயமும் ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த போர் விமானம் ஐ.என்.எஸ் ஹன்சாவிலிருந்து புறப்பட்டது.

 

கோவா அருகே மிக் 29 (MiG-29) ரகத்தைச் சேர்ந்த மிக்29 கே (MiG-29K) என்ற போர் விமானத்தில் கடற்படை விமானிகள் 2 பேர் இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தான. திடீரென போர் விமானத்தில் தீப்பிடித்ததால் கீழே விழுந்து நொறுங்கியது. அப்பொழுது விமானத்தில் இருந்த 2 போர் விமானிகளும் கீழே விழும் நேரத்தில் பாராசூட் உதவிடன் கீழே குதித்து உயிர் தப்பினர். விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. இது பற்றி விமானப் படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

Trending News