இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படையின் MiG 27 வகைப் போர்விமானம் விபத்துக்குள்ளானது!
இந்திய விமானப்படையின் MiG 27 வகைப் போர் விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. இவ்வகை விமானங்கள் பழுதடைந்து வருவது வழக்கமான விஷயமாகிவிட்டது.
இந்நிலையில் இன்று இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே MiG 27 வகைப் போர் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது.
MiG 27 aircraft crashed near Jodhpur during a routine mission. The pilot ejected safely. A court of inquiry will investigate the cause of the accident: Indian Air Force https://t.co/4QSRrWueby
— ANI (@ANI) September 4, 2018
இந்த விபத்தில் இருந்து விமானி முன்கூட்டியே பாராசூட் உதவியால் உயிர்தப்பிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக விமான படை தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.