பிரியங்கா ரெட்டி படுகொலை வழக்கை விரைவாக விசாரிக்க அரசு உத்தரவு!

பிரியங்கா ரெட்டியை படுகொலை வழக்கை விரைவாக விசாரணைக்கு உட்படுத்த தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!!

Last Updated : Dec 1, 2019, 08:46 PM IST
பிரியங்கா ரெட்டி படுகொலை வழக்கை விரைவாக விசாரிக்க அரசு உத்தரவு! title=

பிரியங்கா ரெட்டியை படுகொலை வழக்கை விரைவாக விசாரணைக்கு உட்படுத்த தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!!

தெலுங்கானாவில், அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி, கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் பழுதாகி பாதியில் நின்றது. அந்நேரத்தில், அவருக்கு உதவுவது போல அங்கு வந்த இளைஞர்கள் நால்வரும், அவரை பாலியல் கூட்டுவன்கொடுமைக்கு உட்படுத்தியதோடில்லாமல், கொடூரமான முறையில் கொலையும் செய்தனர்.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போலீசார், குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, அவரை கொடுரமான முறையில் கொலை செய்த குற்றவாளிகளை கொண்டு செல்லும் போலீஸ் வாகனத்தை தாக்கிய இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, தன் உயிரை கூடபொருட்படுத்தாத ஓர் இளைஞர் வாகனத்தின் முன்னால் படுத்து போராடினர். மேலும், இந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவான விசாரணைக்கு விரைவான பாதையை அமைக்க தெலுங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த சம்பவம் தொடர்பாக பெருகிவரும் பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மூத்த மாநில அதிகாரிகளுக்கு விளக்கமளித்த பின்னர் இந்த உத்தரவை நிறைவேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தவும், நான்கு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் KCR அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த வழக்கில் விரைவான விசாரணைக்கு விரைவான நீதிமன்றத்தை அமைப்பதற்கான முடிவு ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது, இதன் போது முதல்வர் இந்த வழக்கில் விரைவான விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். 

முன்னதாக சனிக்கிழமை, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் - முகமது அரீஃப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் மற்றும் சிந்தகுந்தா சென்னகேசவுலு - ஆகியோர் ரங்கா ரெட்டி நீதிமன்றத்தால் 14 நாள் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் சஞ்சல்குடா சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.  

 

Trending News