ஐதராபாத் கட்டிடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து நேரிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. 

Last Updated : Dec 10, 2016, 12:45 PM IST
ஐதராபாத் கட்டிடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு title=

ஐதராபாத்: ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து நேரிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. 

ஐதராபாத்தில் நனகராம்குடா என்ற இடத்தில் வியாழன் இரவு திடீரென 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

நேற்று இரவு 4 சடலங்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்து உள்ளது. 

இதற்கிடையே விபத்து சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Trending News