டெல்லி-என்.சி.ஆரில் வெப்பத்தைத் தணித்த மழை....அதிகாலை முதல் பலத்த மழை

பலத்த காற்றுடன் கூடிய கனமழை திங்கள்கிழமை காலை தேசிய தலைநகரின் சில பகுதிகளைத் தாக்கியது.

Last Updated : Jun 22, 2020, 08:26 AM IST
    1. ஜூன் 25 ஆம் தேதி டெல்லி மற்றும் ஹரியானாவில் தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்திற்கு நிலைமைகள் சாதகமாக மாறக்கூடும்
    2. இன்றைய வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் மேகமூட்டத்துடன் லேசான மழையும் இருக்கும்
டெல்லி-என்.சி.ஆரில் வெப்பத்தைத் தணித்த மழை....அதிகாலை முதல் பலத்த மழை title=

புதுடெல்லி: பலத்த காற்றுடன் கூடிய கனமழை திங்கள்கிழமை காலை தேசிய தலைநகரின் சில பகுதிகளைத் தாக்கியது. இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் புழுக்கத்தில் தவித்து வந்த டெல்லி வாசிகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்தது.

இன்றைய வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் மேகமூட்டத்துடன் லேசான மழையும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

 

READ | வெப்பத்திலிருந்து நிவாரணம்......டெல்லி-என்.சி.ஆரின் சில பகுதிகளில் மழை....

 

 

 

 

 

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்தபின், தேசிய தலைநகரம் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Image

ஜூன் 25 ஆம் தேதி டெல்லி மற்றும் ஹரியானாவில் தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்திற்கு நிலைமைகள் சாதகமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

 

READ | அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு; 50 டிகிரி செல்சியஸை கடந்தது

 

சில வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, மேற்கு வங்கம் மற்றும் அண்டை நாடுகளில் சூறாவளி சுழற்சி காரணமாக பருவமழை ஜூன் 27 தேதியை விட இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக டெல்லியில் வர வாய்ப்புள்ளது என்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

 

 

 

 

 

 

கடந்த சில நாள்களாக நகரில் பெரும்பாலான இடங்களில் 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் இருந்து வந்த நிலையில், இந்த மழை டெல்லிவாசிகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது. டெல்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளாகப் பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது. 

Trending News