நியூடெல்லி: 2023 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. புத்தாண்டை மக்கள் புதிய ஆற்றலுடன் கொண்டாடுகிறார்கள். இதனுடன், புத்தாண்டில், மக்கள் புதிய வேலைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், புத்தாண்டின் போது, மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக செய்யும் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பும் பொய்க்க செய்த அரசின் திட்டம் இது.
முதலீட்டு திட்டம்
உண்மையில், மக்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் பணத்தை போடுகின்றானர். அரசு திட்டங்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு, முதலீட்டில் இருந்து வரிச் சலுகைகளும் கிடைக்கும் திட்டங்களில் முக்கியமானவை பிபிஎஃப், எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா என பல திட்டங்கள் உள்ளன. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களின் நோக்கமும் வேறுபட்டது.
பிபிஎஃப் திட்டம்
PPF இன் நோக்கம் மக்களை முதலீடு செய்ய ஊக்குவிப்பதோடு, வரி விலக்கு மற்றும் நீண்ட காலத்திற்கு சேமிப்பதும் ஆகும், சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் நோக்கம் பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக பெற்றோர்களை சேமிக்க ஊக்குவிக்கும் திட்டம் ஆகும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
இரண்டு திட்டங்களிலும், வெவ்வேறு விகிதங்களில் ஆண்டு அடிப்படையில் வட்டியும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், புத்தாண்டின் போது, பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் வட்டி அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர், இருப்பினும் இது நடக்கவில்லை. அரசாங்கத்தால் சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் வட்டி அதிகரிக்கப்படவில்லை.
வட்டி அதிகரிப்பு இல்லை
தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவுடன் இணைந்துள்ளனர். PPF திட்டத்தில் 7.1% வீதத்தில் ஆண்டு வட்டியும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு ஆண்டுதோறும் 7.6% வட்டியும் அரசாங்கம் வழங்குகிறது. இந்த வட்டியில் தற்போது அதிகரிப்பு இல்லை.
ஆனால், பிற சிறு சேமிப்பு திட்டங்களை காட்டிலும் அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் முதலீட்டாளருக்கு சிறந்த வருமானத்தை தருகிறது. இந்த கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்காக, குழந்தையின் பாதுகாவலர் பெயரில் தொடங்கலாம், குழந்தைக்கு 18 வயது ஆனது கணக்கை குழந்தையின் பெயரில் நிர்வகித்துக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் கணக்கை திறக்கலாம். இந்த கணக்கை எந்தவொரு வங்கி அல்லது தபால் நிலையங்களிலும் திறந்து கொள்ளலாம் மற்றும் தேவைப்படும் வங்கி அல்லது தபால் நிலைய கிளைகளுக்கும் மாற்றி கொள்ளலாம்.
மேலும் படிக்க | வெல்லத்தில் கலப்படம்: பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ