Gandhi Jayanthi 2020: பல நலத்திட்டங்களுடன் இந்த நன்நாளை கொண்டாடுகிறது இந்தியா!!

உலகெங்கிலும் உள்ள மக்கள் மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் பங்களிப்பை நினைவில் நிறுத்திப் பார்க்கும் இந்த நாளில், பல முக்கியமான நிகழ்வுகள் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 11:07 AM IST
  • குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்து.
  • புனேவில் பழங்குடியினருக்கான இயற்கை மருத்துவ மருத்துவமனையை திறந்து வைக்கிறார் ஆயுஷ் அமைச்சர்.
  • ஜன் சக்தி அமைச்சகம் அங்கன்வாடிகள், பள்ளிகளில் பாதுகாப்பான நீர் விநியோகத்திற்காக 100 நாள் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது.
Gandhi Jayanthi 2020: பல நலத்திட்டங்களுடன் இந்த நன்நாளை கொண்டாடுகிறது இந்தியா!!  title=

இந்திய மக்களால் அன்பாக ‘பாபு’ என்று அழைக்கப்படும் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 151 வது பிறந்த நாளை நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு மாற்றம் அவசியம் என்று மகாத்மா காந்தி அவர்கள் நம்பினார். 'உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்' என்ற அவரது வார்த்தைகள் பலரை உற்சாகப்படுத்துகின்றன.

உலகெங்கிலும் உள்ள மக்கள் மாபெரும் தலைவர் மகாத்மா காந்தியின் (Mahatma Gandhi) பங்களிப்பை நினைவில் நிறுத்திப் பார்க்கும் இந்த நாளில், பல முக்கியமான நிகழ்வுகள் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ளன.

ALSO READ: காந்தி ஜெயந்தியன்று நிறைவேறிய காஷ்மீர் பெண்ணின் கனவு!!

அவற்றைப் பற்றி பார்க்கலாம்:

- பிரதமர் மோடி அவர்கள் இன்று VAIBHAV உச்சி மாநாட்டை தொடக்கிவைக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு வைஷ்விக் பாரதிய வைக்யானிக் (VAIBHAV) உச்சிமாநாட்டைத் தொடக்கி வைப்பார். VAIBHAV உச்சி மாநாடு வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் வசிக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் உலகளாவிய மெய்நிகர் உச்சி மாநாடாகும். இது அக்டோபர் 2 முதல் அக்டோபர் 3 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- ஜன் சக்தி அமைச்சகம் அங்கன்வாடிகள், பள்ளிகளில் பாதுகாப்பான நீர் விநியோகத்திற்காக 100 நாள் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தேசிய ஜல் ஜீவன் மிஷன் இந்த காந்தி ஜெயந்தியன்று 100 நாள் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது என்று ஜல் சக்தி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

- புனேவில் பழங்குடியினருக்கான இயற்கை மருத்துவ மருத்துவமனையை திறந்து வைக்கிறார் ஆயுஷ் அமைச்சர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின குக்கிராமத்தில் இயற்கை மருத்துவமனையை மத்திய ஆயுஷ் (AYUSH)  அமைச்சர் ஸ்ரீபாத் எசோ நாயக் திறந்து வைப்பார்.

- மகாத்மா காந்திக்கு பிடித்த பஜனான ‘வைஷ்ணவ் ஜன்’ பாடலின் காஷ்மீரி பதிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது

மகாத்மா காந்தியின் விருப்பமான பஜனாகக் கருதப்படும் “வைஷ்ணவ் ஜான் தோ” என்ற பிரபலமான பஜனின் காஷ்மீர் பதிப்பு இன்று வெளிவரும். கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் தொலைந்து போய்விட்ட அமைதிச் செய்தியை பரப்புவதற்காக காந்தியடிகளின் 151 வது பிறந்தநாளில் இது வெளியிடப்படுகிறது.

- ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் 'கிராமத்திற்குத் திரும்பு' திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று தொடங்க உள்ளது

ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான 'கிராமத்திற்கு திரும்பு' திட்டத்தின் மூன்றாம் கட்டம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் அடிமட்ட மட்டத்தில் வளர்ச்சியை மறுஆய்வு செய்வதையும், பொது குறைகளை நிவர்த்தி செய்வதையும் இந்த நிகழ்ச்சி காணும்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் காந்தி ஜெயந்தி தினத்தன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நமது 'தேசத் தந்தையிடமிருந்து' உத்வேகம் பெறுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ: COVID Test-க்கு போன குட்டி காந்தி: இணையத்தில் இதயங்களை வெல்லும் சிறுவனின் படங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News