குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி... ரயில், விமான சேவை ரத்து!

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு முழுவதும் (குறிப்பாக அசாமில்) பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

Last Updated : Dec 12, 2019, 12:23 PM IST
  • பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படும் குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  • மசோதாவுக்கு ஆதரவாக மேல் சபையின் நூற்று இருபத்தைந்து உறுப்பினர்கள் வாக்களித்தனர், 105 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
  • முன்னதாக மக்களவையில் 80 வாக்குகளுக்கு எதிராக 311 வாக்குகள் பெற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி... ரயில், விமான சேவை ரத்து! title=

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு முழுவதும் (குறிப்பாக அசாமில்) பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

தலைநகரான குவஹாத்தி மற்றும் திப்ருகார் நகரம் மேலும் உத்தரவு வரும் வரை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. வன்முறை போராட்டங்களை அடுத்து, குவஹாத்தி மற்றும் திப்ருகார் பகுதிகளில் ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் போராட்டங்கள் ஓயும் வரை பல விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில் பிரபல விமான சேவை நிறுவனமான விஸ்டாரா வியாழக்கிழமை குவஹாத்தி மற்றும் திப்ருகார் ஆகிய இரண்டு விமானங்களை ரத்து செய்தது. இதுகுறித்து விமான சேவை நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "அசாமில் தற்போதைய இடையூறுகள் காரணமாக அரசாங்கத்தின் ஆலோசனையின்படி, விமானம் UK725 (IXB - DIB) மற்றும் UK726 (DIB-IXB) ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை வழியாக குவஹாத்தி மற்றும் திப்ருகார் விமானங்களுக்கு இலவச மாற்றம் / ரத்துசெய்தலை நாங்கள் வழங்குகிறோம்," என குறிப்பிட்டுள்ளது.

SpiceJet மற்றும் GoAir ஆகியவை டிசம்பர் 13-ஆம் தேதி வரை குவஹாத்தி, திப்ருகார் மற்றும் ஜோர்ஹாட்டிலிருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் தங்கள் விமானங்களை ரத்து செய்வதையும் கட்டண தள்ளுபடி செய்வதையும் அறிவித்துள்ளன.

இதற்கிடையில், வடக்கு எல்லை ரயில்வே பிரிவில் உள்ள அனைத்து ரயில்களும் போராட்டங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர், டின்சுகியா, தேமாஜி, திப்ருகார், சரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட், கோலாகாட், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கம்ரூப் ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை இரவு 7 மணி முதல் 24 மணி நேரம் நிர்வாகம் இணைய சேவைகளை நிறுத்தியுள்ளது.

இதனிடையே திரிபுராவில் அசாம் ரைபிள்ஸ் துருப்புக்களின் இரண்டு நெடுவரிசைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், திரிபுரா மற்றும் அசாமில் உள்ள சிவில் நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில் அசாமில் மூன்றாவது நெடுவரிசை காத்திருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முற்படும் குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக மேல் சபையின் நூற்று இருபத்தைந்து உறுப்பினர்கள் வாக்களித்தனர், 105 உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். முன்னதாக மக்களவையில் 80 வாக்குகளுக்கு எதிராக 311 வாக்குகள் பெற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News