புதுடெல்லி: ITO அருகே டெல்லி போலீசாருடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் நாட்டின் தலைநகரான டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டையை அடைந்துள்ளனர். விவசாயிகள் எதிர்ப்பாளர்களும் செங்கோட்டையில் தங்கள் கொடியை ஏற்ற முயன்றனர்.
Delhi: Flags installed by protestors continue to fly at Red Fort. #FarmLaws #RepublicDay pic.twitter.com/U0SZnTw4Wn
— ANI (@ANI) January 26, 2021
Delhi: Another protestor puts a flag on the pole at Red Fort#RepublicDay pic.twitter.com/lyRTnQjRPz
— ANI (@ANI) January 26, 2021
#WATCH A protestor hoists a flag from the ramparts of the Red Fort in Delhi#FarmLaws #RepublicDay pic.twitter.com/Mn6oeGLrxJ
— ANI (@ANI) January 26, 2021
#WATCH Protestors enter Red Fort in Delhi, wave flags from the ramparts of the fort pic.twitter.com/4dgvG1iHZo
— ANI (@ANI) January 26, 2021
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்று வருகிறது. சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் நுழைந்த விவசாயிகள், சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகருக்குள் நுழைந்தனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை (Farmers) கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதனால் விவசாயிகள் போராட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | Farmers Tractor Rally: டெல்லி மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் கடுமையாக பாதிப்பு!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை (Farm Laws) ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். சுமார் 2 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
டெல்லிக்குள் டிராக்டரில் வந்த விவசாயிகள் அனுமதிக்கப்படாத இடங்களிலும் நுழைந்துவிட்டனர். தற்போது அவர்கள் செங்கோட்டையை (Red Fort) அடைந்தனர். செங்கோட்டை கொத்தளத்தில் ஏறி மூவர்ணக் கொடிகளையும், விவசாய சங்கங்களின் கொடியையும் ஏற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெறும் சர்ச்சை ஆகி பரவி வருகிறது.
ALSO READ | டிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR