20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்!!

ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது.

Last Updated : Apr 10, 2019, 08:29 AM IST
20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்!! title=

ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திரா, தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், காஷ்மீர், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய 20 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. 

20 மாநிலங்களிலும் உள்ள  91 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தொகுதிகளிலும், பிரசாரம் நேற்று மாலை நிறைவடைந்தது. இந்நிலையில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதி நடைபெறவுள்ளது.

Trending News