6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவு!!

118 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு!!

Last Updated : May 10, 2019, 10:39 AM IST
6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவு!! title=

118 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த ஐந்து கட்ட தேர்தலில் 425 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளது.  

மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் மே 12 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், டில்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 59 தொகுதகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இவற்றுடன் சேர்த்து ஏப்ரல் 11 ஆம் தேதி திரிபுராவில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஒரு ஓட்டுச்சாவடி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் மறுஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் பிரதமர் மோடி,காங்கிரஸ் தலைவர் ராகுல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Trending News