DRDO தயாரித்துள்ள படையினருக்கான இலகு ரக Bulletproof ஜாக்கெட்; ராஜ்நாத் சிங் பாராட்டு

ஜாக்கெட்டின் சிறப்பு அம்சத்தை பற்றி குறிப்பிட்ட டிஆர்டிஓ, ஜாக்கெட்டின் எடை எந்த அளவிற்கு குறைகிறதோ அந்த அளவிற்கு அது படையினருக்கு அணிவதற்கு எளிதானதாக, சவுகரியமானதாக, இருக்கும் என்று கூறியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2021, 09:05 PM IST
  • பிஐஎஸ் தரநிலைகளுக்காக நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
  • படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
  • குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை உருவாக்கியது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
DRDO தயாரித்துள்ள படையினருக்கான இலகு ரக Bulletproof ஜாக்கெட்; ராஜ்நாத் சிங் பாராட்டு title=

DRDO  ராணுவத்தினருக்கான இலகு ரக குண்டு துளைக்காத ஜாக்கெட்டை தயாரித்துள்ளது. 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு- டிஆர்டிஓ,  குறைந்த எடை கொண்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கான்பூரில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டின் எடை 9 கிலோ மட்டுமே. இந்த ஜாக்கெட் இந்திய ராணுவத்தின் தர தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ (DRDO) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TBRL) 'ஃப்ரண்ட் ஹார்ட் ஆர்மர் பேனல்' ஜாக்கெட் பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் பிஐஎஸ்  தரநிலைகளுக்காக நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜாக்கெட்டின் சிறப்பு அமசத்தை பற்றி குறிப்பிட்ட டிஆர்டிஓ, ஜாக்கெட்டின் எடை எந்த அளவிற்கு குறைகிறதோ அந்த அளவிற்கு அது படையினருக்கு அணிவதற்கு எளிதானதாக, சவுகரியமானதாக, இருக்கும்.  மேலும் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறந்த தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. 

படையினர் வசதியாக அணிந்து கொள்லும் வகையில், டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள், குறைந்த எடை கொண்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை உருவாக்கியது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டின்  தயாரிப்பு குறித்து டி.ஆர்.டி.ஓவின் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டியும் டி.எம்.எஸ்.ஆர்.டி.ஐ குழுவை வாழ்த்தினார்.

ALSO READ | தமிழகத்தின் தாய்மார்கள் திமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் : அமித் ஷா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News