கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் 30 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி கடந்த ஆகஸ்ட் 12 அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை செய்து வருகிறது.
முன்னதாக இந்த சம்பவதில் குழந்தைகள் மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீல் கான் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து கபீர்கான் தலைமறைவாகி விட்டார் எனவும் அவரைத் தேடி வந்ததாகவும் கூறிவந்த போலீசார் இன்று காலை அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.