Diesel Rate: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த டீசல் விலை

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2021, 07:36 AM IST
Diesel Rate: சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த டீசல் விலை title=

Petrol Prices Latest Update: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum), இந்தியன் ஆயில் (Indian Oil) , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் (Petrol, Diesel Price) இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ALSO READ | விரைவில் பெட்ரோல் 4 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைய வாய்ப்பு -முழு விவரம்

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநிலத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று இரவு முதலே அது நடைமுறைக்கு வந்தது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி, கடந்த 2 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39-க்கும் விற்பனையானது. 

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையை பொறுத்தவரை சென்னையில் 31 நாட்களுக்கு பின்னர் இன்று டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 94.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு விலை மாறுகிறது
தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாறுகிறது. புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் பொருந்தும். பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிறவற்றைச் சேர்த்த பிறகு, அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் மாறுகின்றன, அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலை என்ன என்பதைப் பொறுத்து.

இது போன்ற பெட்ரோல் டீசல் விலையை சரிபார்க்கவும்
SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் வேறுபட்டது. ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HPPrice-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News