Chhapaak திரைப்படத்தில் வில்லனாக இந்து நபர்?... உண்மை என்ன?

JNU-வில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்த தீபிகா படுகோனே JNU வளாகத்திற்கு வருகை தந்த ஒரு நாள் கழித்து, அவரது சபாக் திரைப்படம் தொடர்பாக மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது!

Last Updated : Jan 8, 2020, 07:15 PM IST
Chhapaak திரைப்படத்தில் வில்லனாக இந்து நபர்?... உண்மை என்ன? title=

JNU-வில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்த தீபிகா படுகோனே JNU வளாகத்திற்கு வருகை தந்த ஒரு நாள் கழித்து, அவரது சபாக் திரைப்படம் தொடர்பாக மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது!

2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக போர்கொடிகள் தற்போது எழுந்துள்ளது.

2005-ஆம் ஆண்டில், டெல்லியின் உயர்மட்ட கான் சந்தையில் நதீம் கான் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் ​​லக்ஷ்மி என்பவரை ஆசிட் வீசி தாக்கினர். இந்த சம்பவத்தில் லக்ஷ்மி உயிருக்கு சிதைக்கப்பட்டார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தற்போது சபாக் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்க்க கூடாது எனவும், JNU மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த திபிகா படுகோனுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் எனவும் நேற்று துவங்கி சமூக ஊடக போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் அடுத்தக்கட்ட நகர்வாக தீபிகா படுகோனின் திரைப்படத்தில் இந்து சமூகத்தின் பெயர் வில்லனாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், படத்தினை புறக்கணிக்க வேண்டும் எனவும் சமூக ஊடக போராளிகள் தங்கள் போராட்டத்தை முன்னேற்றினர்.

உண்மை கதையில் லக்ஷ்மி அகர்வாலின் மீது ஆசிட் வீசியது நதீம் கான் என்னும் இஸ்லாமியர். ஆனால் இந்த திரைப்படத்தில் நதீம் கான் என்னும் இஸ்லாமியர் பெயருக்கு பதிலாக ராஜேஷ் என்னும் இந்து நபரின் பெயரை பயன்படுத்தி உள்ளனர் என்பது போராட்டக்காரர்களின் கூற்று. இந்த தகவல்கள் நெறுப்பாய் பரவி இணையத்தில் இன்று மாலை 4.00 மணிக்குள்ளாக மட்டும் சுமார் 60000 ட்விட்டுகள் பறந்துள்ளன. மேலும் இந்த தவறான கருத்து மற்றுமொரு மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்கநர் மேகனா குல்ஜார் இதுகுறித்து தெரிவிக்கையில்.,  இந்த படத்தின் கதை லக்ஷ்மியின் கதையை அப்படியே கூறுகிறது, ஆனால் கதாப்பாத்திரங்களை தவிர. கதாப்பாத்திரங்களின் பெயர் லக்ஷ்மி-க்கு ‘மாலதி’ அகர்வால் என்றும்,  நதீமின் பெயர் ‘பாபூ’ என்கிற ‘பஷீர் கான்’ எனவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ராஜேஷ் என்பது மாலதியின் காதலர் பெயர் எனவும்" தெரிவித்துள்ளார். என்றபோதிலும் இத்திரைப்படத்திற்கு எதிரான சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Trending News