காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது -சின்கா!

மற்ற கட்சிகளில் குடும்ப அரசியல் உள்ளது என விமர்சிக்கும் பாஜக-வில் குடும்ப அரசியல் இல்லையா என பிரதமர் மோடிக்கு சத்ருகன் சின்கா கேள்வி எழுப்பியுள்ளார்!

Last Updated : Mar 25, 2019, 09:55 AM IST
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது -சின்கா! title=

மற்ற கட்சிகளில் குடும்ப அரசியல் உள்ளது என விமர்சிக்கும் பாஜக-வில் குடும்ப அரசியல் இல்லையா என பிரதமர் மோடிக்கு சத்ருகன் சின்கா கேள்வி எழுப்பியுள்ளார்!

பீகார் மாநிலம் பாட்னா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சராக பதவி வகித்து வரும் சத்ருகன் சின்காவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை., இரண்டு முறை பாஜக சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்ட சத்ருகன் சின்காவுக்கு பதிலாக இம்முறை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் போட்டியிடவுள்ளார்.

சத்ருகன் சின்கா-விற்கும் ஆளும் பாஜக-வினருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது, இந்நிலையில் தற்போது வரும் மக்களவை தேர்தலில் சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு அளிக்காமல் பாஜக ஏமாற்றியுள்ளது.

இந்நிலையில் ஆளும் பாஜக தலைமையினை சாடும் விதமாக சத்ருகன் சின்கா தனது ட்விட்டரில் கருத்துகளை  பதிவிட்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது...

"காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.

‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ உருவாக்கும் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல் காற்றோடு போய்விட்டதோ? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது." என குறிப்பிட்டுள்ளார்.

Trending News