‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்திற்கு தடை விதிக்க HC மறுப்பு!!

நெட்பிளிக்சில் வெளியான குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது..!

Last Updated : Sep 2, 2020, 01:53 PM IST
‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்திற்கு தடை விதிக்க HC மறுப்பு!! title=

நெட்பிளிக்சில் வெளியான குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது..!

கார்கில் போரை சித்தரிக்கும் ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படம் கடந்த 12 ஆம் தேதி நெட்பிலிக்சில் வெளியானது. இந்த படம் இந்திய விமானப் படையை (IAF) மோசமாக சித்தரிப்பதாகவும், விமானப்படையில் பாலியல் பாகுபாடு உள்ளது என  தவறாக கூறுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதற்கு தடைவிதிக்குமாறு மத்திய அரசு சார்பில் மனு தாக்கலானது. இந்திய விமானப்படை (IAF) குறித்து படத்தில் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறிய நிலையில், நீதிமன்ற அறிவிப்பு வந்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 12’ஆம் தேதி OTT தளமான நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியிடப்பட்டது. இந்த வலக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தர், ஓடிடி மேடையில் படம் வெளிவருவதற்கு முன்பு ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கேள்வியெழுப்பினார். மேலும், படம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டதால் இப்போது தடை உத்தரவு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.  

ALSO READ | SIP-யின் சிறிய முதலீடு உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க உதவும்.. எப்படி?

நீதிமன்றத்தில் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், “இந்த திரைப்படம் IAF குறித்து தவறான எண்ணத்தை விதைக்கும் வகையில் பாலின சார்புடையது என்று காட்டியுள்ளது. அது சரியானதல்ல.” என வாதிட்டார். இப்படத்தை தயாரித்த தர்மா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் திரைப்படத்தை வெளியிட்ட ஓடிடி காலமான நெட்ஃபிலிக்ஸ் ஆகிய இரண்டும் பதிலளித்தது.

முன்னாள் விமான லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனாவும் இந்த வழக்கில் ஒரு வாதியாக மாற்றப்பட வேண்டும் என்றும், அவரின் பதிலைக் கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

Trending News