Delhi News Today: டெல்லி ஜகத்புரி பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் நிரம்பியிருந்த கிளஸ்டர் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஜகத்புரி, ப்ரீத் விஹார், பட்பர்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பல கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த வழியாக பைக் ஓட்டி வந்த நபர் மட்டும் இல்லை என்றால், பெரிய அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்த பைக் ஓட்டி வந்த நபர் உடனடியாக பஸ் டிரைவருக்கு தெரிவித்தார். பஸ் பயணிகள் பைக்கில் வந்த நபரை கடவுள் போல வந்து காப்பாற்றினாய் எனக்கூறினார்.
கிளஸ்டர் பஸ் தீப்பிடித்து எரிவதாக பைக்கில் சென்ற ஒருவர் பஸ் டிரைவரிடம் கூறியதால், டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
அடுத்து சில நொடிகளில் பேருந்து முழுவதும் தீப்பிடித்தது. நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்தால், அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் போல காட்சியளிக்கிறது. பேருந்து தீ பிடித்து எரியும் வீடியோ ஒன்றும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பேருந்தின் உள்ளே மீட்புக் குழுவினர் காணப்படுகின்றனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
பேருந்தில் தீ பிடித்த வீடியோ:
#WATCH | Delhi: Fire broke out in a cluster bus at Jagatpuri bus stand earlier today. The area was cordoned off and all passengers, about 40 in number, were rescued. Three fire tenders reached the spot immediately and extinguished the fire. No casualties or injuries were… pic.twitter.com/2fK7NjIEbd
— ANI (@ANI) August 29, 2024
பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, ஜகத்புரி, ப்ரீத் விஹார், பட்பர்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரம் நெரிசல் ஏற்பட்டது. மற்ற பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதைக் காணலாம். மேலும் லேசான மழையும் பெய்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) காலை 9:45 மணி அளவில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்தில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த முழு விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மேலும் படிக்க - ஓநாய்களின் கொடூர தாக்குதல்... 8 சிறார்கள், 1 பெண் பலி - அச்சமூட்டும் பகீர் சம்பவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ