டெல்லியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவிவருவதால், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தைபோன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது.
Delhi: A layer of fog covers the national capital, temperature drops as the winter intensifies in the city. pic.twitter.com/hPTqUWgHMQ
— ANI (@ANI) December 14, 2019