இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது!
டெல்லியில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில், இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில், 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தவிர, ரூ.3,364 கோடி செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ரூ.24,879 கோடிக்கு பிற ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.46,000 ஆயிரம் கோடி செலவில் கொள்முதலுக்கான முடிவுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Defence Acquisition Council (DAC) approved procurement for the Services amounting to approximately Rs. 46,000 crores. today. Out of the total amount, over Rs.21,000 crores will be used to procure 111 Utility Helicopters for the Navy. pic.twitter.com/vjnIO2MRpo
— ANI (@ANI) August 25, 2018