Coronavirus updates: கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் 4,194 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று ( 2021, மே 21) மட்டும் நாட்டில் மொத்தம் 2,57,299 பேருக்கு கோவிட் -19 ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக 3 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பை இந்தியா பதிவு செய்துள்ளது.
நேற்று இந்தியாவில் சுமார் 2.67 லட்சம் வழக்குகள் பதிவாகின. கோவிட் நோய் பாதிப்பு குறைந்து வருவதை போல் இறபு எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,194 பேர் இறந்துள்ளனர்.
India reports 2,57,299 new #COVID19 cases, 3,57,630 discharges & 4,194 deaths in last 24 hrs, as per Health Ministry.
Total cases: 2,62,89,290
Total discharges: 2,30,70,365
Death toll: 2,95,525
Active cases: 29,23,400Total vaccination: 19,33,72,819 pic.twitter.com/NNm0bCEEdK
— ANI (@ANI) May 22, 2021
இந்நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசு வவங்கும் 70% தடுப்பூசிகளை இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். தடுப்பூசி வீணாகாமல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ALSO READ | சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR