INDIA Alliance Seat Sharing Formula: இந்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் 2024-க்கு (Lok Sabha elections 2024) எதிர்க்கட்சி கூட்டணிக்கான சீட் பங்கீடு பார்முலாவை காங்கிரஸ் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை நாளை (புதன்கிழமை, ஜனவரி 03) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் சமர்ப்பிக்கப்படும்.
9 மாநிலங்களில் கூட்டணி
காங்கிரஸ் (Congress) தரப்பில் கிடைத்த ஆதாரங்கள் படி 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 மாநிலங்களில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் (I.N.D.I.A Alliance) இடம் பெற்றுள்ள கட்சிகளுடனான சீட் பகிர்வு குறித்தது மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதித்துள்ளது. தற்போது சீட் பகிர்வு மற்றும் கூட்டணி குறித்து கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல். அந்த அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை பேசும் எனத் தெரிகிறது.
290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு
வரவிருக்கும் 2024 தேர்தலில் தோராயமாக 290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல். டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற்ற கூட்டணிக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாநிலங்களில் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்
ஜம்மு காஷ்மீர், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி அமைப்பதில் சிக்கல்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடியும் என்றாலும், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை கூட்டணிக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் காங்கிரசுடன் இணையும் ஒய்எஸ்ஆர்டிபி கட்சி
இது தவிர, ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ் ஷர்மிளா (YS Sharmila) தனது கட்சியான ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை (ஒய்எஸ்ஆர்டிபி -YSR Telangana Party) காங்கிரசுடன் இணைக்கலாம். இந்த வார இறுதியில் அவர் டெல்லி வருவார் என்றும், அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரசில் இணையும் ஒய்எஸ் ஷர்மிளா
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சில நாட்களுக்கு பின், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா இந்த வாரம் காங்கிரசில் இணையவுள்ளார்.
ஆந்திரா சட்டசபை தேர்தல்
ஆந்திராவிலும் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில், ஷர்மிளாவுக்கு பெரிய பொறுப்பை வழங்கி மாநிலத்தில் நிற்க வைக்க காங்கிரஸ் முயற்சிக்கும். முன்னதாக தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஷர்மிளாவும் காங்கிரசுக்கு ஆதரவளித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஏபிசிசி -Andhra Pradesh Congress Committee) தலைவர் கிடுகு ருத்ர ராஜு, ஒய்.எஸ்.ஷர்மிளா விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ